Shanmugan Murugavel / 2016 ஜூன் 30 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை றக்பி களத்தில், அண்மையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, சென். ஜோஸப் கல்லூரிக்கெதிராக போகம்பறையில் இடம்பெற்ற போட்டியில் விதிமுறைகளுக்கு புறம்பாக தர்மராஜா கல்லூரி நடந்து கொண்டமை காரணமாக, அவ்வணிக்கு ஒன்பது மாத கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
இதேவேளை, பிராட்பி ஷீல்ட் போட்டியின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இடம்பெற்ற சம்பவத்துக்காக திருத்துவக் கல்லூரிக்கு ஆறு மாத தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பாதுக்க ஸ்ரீ பியரத்ன கல்லூரியுடன் கடந்த மே மாதம் 24ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்துக்காக, கொழும்பு கரே கல்லூரிக்கு ஆறு மாத கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்லேகல அரங்கில் இடம்பெற்ற 72ஆவது பிராட்பி ஷீல்ட் போட்டியின் விருது வழங்கும் நிகழ்வில், வீரர்களிடையே தோன்றிய மோதல், பின்னர் பார்வையாளர்களிடையே பரவியிருந்தது. இதன் காரணமாக திருத்துவக் கல்லூரியின் 20 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு, ஜூலை முதலாம் திகதியிலிருந்து ஆறு மாத காலம் போட்டித் தடை விதிக்கப்படுவதாக கல்வியமைச்சின் நேற்றைய உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவிக்கின்றது.
இதேவேளை, தர்மராஜ கல்லூரிக்கும் சென்.ஜோஸப் கல்லூரிக்குமிடையே கடந்த மாதம் 18ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில் இடம்பெற்ற சம்பவம் காரணமாக, தர்மராஜவின் 20 வயதுக்குட்பட்டோர் அணிக்கு ஒன்பது மாத போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளமையால், அனைத்து முடியுமான நடவடிக்கைகளிலிருந்தும் அவ்வணி கட்டுப்படுத்தப்பட்டதுடன், இரண்டு வருட நன்னடத்தைக் காலத்தையும் அவ்வணி பெற்றுள்ளது.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago