Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஜனவரி 16 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி பிரீமியர் லீக் தொடரின் 7ஆவது அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் மஹஸீன்ஸ் கழகத்தினை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்திய லியோ கிங்ஸ் கழகம் நடப்பாண்டின் சம்பியன் மகுடத்தினை தனதாக்கிக் கொண்டது.
கற்பிட்டி கிரிக்கெட் கழகங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 6 அணிகளைக் கொண்ட கற்பிட்டி பிரீமியர் லீக் தொடரின் 7ஆவது அத்தியாயத்தின் லீக் ஆட்டங்கள் கடந்த 5,6 மற்றும் 7 ஆம் திகதிகளில் இடம்பெற்றிருந்தன. ஓர் அணிக்கு 15 வீரர்கள் என்றடிப்படையில் ஏலம் விடப்பட்டு, ஓர் அணி ஒரு லட்சம் ரூபாய்களுக்கு வீரர்களை கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய லியோ கிங்ஸ், மஹஸீன்ஸ், பூம்ஸ், கங்காரூஸ், எம்.டி.எம் மற்றும் ரைசிங் ஸ்டார்ஸ் ஆகிய 6 அணிகள் இத் தொடரில் பங்கேற்றிருந்தன. இந்த ஆறு அணிகளும் முதல் லீக் சுற்றில் மற்றைய அணியுடன் ஒரு போட்டியில் பங்கேற்றிருக்க முதல் 4 இடங்களைப் பெறும் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியிருந்தது.
பின்னர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரைப் போன்று முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் குலிபயர் 1 போட்டியிலும் 3 மற்றும் 4ஆம் இடங்களைப் பெறும் அணிகள் எலிமினேட்டர் போட்டியிலும் பங்கேற்கும் வண்ணம் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய குலிபயர் 1 போட்டியில் வெற்றி பெற்ற லியோ கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானது. பின்னர் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதியில் ஏற்கெனவே குலிபயர் போட்டியில் தோற்ற மஹஸீன்ஸ் அணி எலிமினேட்டர் போட்டியில் வென்ற ரைசிங் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மஹஸீன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தது. இதற்கமைய களம் நுழைந்த மஹஸீன்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களை லியோ கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளரான சாஜித் நிலைக்க விடாமல் செய்ய 8 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது மஹஸீன்ஸ் அணி. துடுப்பாட்டத்தில் சத்துரங்க 16 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சாஜித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் சவால் மிக்க இலக்கை நோக்கி பதிலளித்த லியோ கிங்ஸ் அணி வெறும் 6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 82 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதுடன் நடப்பு ஆண்டின் கற்பிட்டி பிரீமியர் லீக் தொடரின் சம்பியன் மகுடத்தினை தனதாக்கிக் கொண்டது. துடுப்பாட்டத்தில் சாஜித் 27 ஓட்டங்களை விளாசினார்.
பந்துவீச்சில் சபான் 3 விக்கெட்டுகளை சாய்ந்தார். இப் போட்டித் தொடரில் சிறப்பாட்டக் காரருக்கான விருதினை லியோ கிங்ஸ் அணியின் பஜீல் பெற்றதுடன் இறுதிப் போட்டியின் நாயகனாக அதே அணியின் சாஜித்தும் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
ரஸீன் ரஸ்மின்
18 minute ago
21 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 minute ago
39 minute ago