குணசேகரன் சுரேன் / 2017 ஜூன் 12 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழகம், வடமராட்சி பிறிமியர் லீக் என்னும் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியொன்றை, நேற்று (11) ஆரம்பித்துள்ளது.
வடமராட்சி லீக்கில் பதிவு செய்யப்பட்ட அணிகளின் வீரர்களைத் தெரிவு செய்து, அவர்களை ஆறு அணிகளாகப் பிரித்து, இச்சுற்றுப் போட்டி நடைபெறுகின்றது. ஆறு அணிகளையும் ஆறு உரிமையாளர்கள் பொறுப்பேற்று, அந்த அணிக்கான வீரர்களை ஏலம் மூலம் தெரிவு செய்தனர்.
குறித்த ஆறு அணிகளுக்கிடையில், அணிக்கு ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி நடைபெறுகின்றது. அந்த 6 அணிகளும் வருமாறு,

பேர்ள் போய்ஸ் - இந்த அணியின் உரிமையாளராக நெல்லியடி செல்லமுத்து டெக்ஸ்டைல் உரிமையாளர் எஸ். பிறேம்குமார் உள்ளார். பயிற்றுவிப்பாளராக, யு.அன்ரனி, முகாமையாளராக எஸ்.ஜனார்த்தனன் ஆகியோர் உள்ளனர். அணி வீரர்களாக, பிறேம்குமார் (அணித்தலைவர் - டயமன்ஸ்), உசாந்தன் (டயமன்ஸ்), பேரின்பராஜ் (கொலின்ஸ்), சசிக்குமார் (கொலின்ஸ்), ஜனார்த்தனன் (டயமன்ஸ்), பிரபு (கருணாகரன்), நலினிகாந்தன் (டயமன்ஸ்), சாலுஜன் (மனோகரா), திருக்குமரன் (கொலின்ஸ்), லக்கீசன் (டயமன்ஸ்), சஞ்சீவன் (உடுப்பிட்டி யூத்), வினித் (கலைமகள்).

வட ஸ்ரைக்கர்ஸ் - இந்த அணியின் உரிமையாளராக, நெல்லியடி மருதம் பெயின்ட்ஸ் உரிமையாளர் எஸ்.தயாபரன், முகாமையாளராக எஸ்.அருண், பயிற்றுவிப்பாளராக எல்.அனுராகாந்தன் ஆகியோர் உள்ளனர். அணியில் உள்ள வீரர்களாக, அனுசாந்த் (அணித்தலைவர் - கொலின்ஸ்), எஸ்.பிரவீன்குமார் (கரணவாய் மத்தி), துசிகரன் (டயமன்ஸ்), மதுஜன் (றேஞ்சர்ஸ்), ராகுல் பிரசாந்த் (டயமன்ஸ்), சிந்துஜன் (அண்ணா சிலையடி), நிரோஜன் (கொலின்ஸ்), நிசாளன் (கரணவாய் மத்தி), ரவிசாந்த் (நவஜீவன்ஸ்), அரவிந்தன் (கொலின்ஸ்), இனியானன் (மனோகரா), சிவோத்மன் (கொலின்ஸ்) ஆகியோர் உள்ளனர்.

கொலிகன்ஸ் 7 - நெல்லியடி தேவா ஸ்டுடியோ உரிமையாளராக, முகாமையாளராக கே.உதயசங்கரும், பயிற்றுவிப்பாளராக பி.தணிகவேலும் உள்ளனர். அணியின் வீரர்களாக சாரங்கன் (அணித்தலைவர் - பொம்மேர்ஸ்), அருந்தவராசா (பொம்மர்ஸ்), பவிதரன் (டயமன்ஸ்), மதுசூதனன் (டயமன்ஸ்), சுஜீவன் (டயமன்ஸ்), பிரியதர்ஸன் (யங்கம்பன்ஸ்), மிதுர்சன் (மனோகரா), கௌசிகன் (நவசக்தி), மணாளன் (இமையாணன் யூத்), விமல்ராஜ் (கொலின்ஸ்), ராகுலன் (கொலின்ஸ்), புவீந்திரன் (கொலின்ஸ்) ஆகியோர் உள்ளனர்.

புளு றொக்கர்ஸ் - அணியின் உரிமையாளராக, கரணவாய் திரு வீடியோ விசன் உள்ளது. அணியின் முகாமையாளராக, எஸ்.பிரசாத், அணியின் பயிற்றுவிப்பாளராக ஏ.வசநாதன் ஆகியோர் உள்ளனர். அணியின் வீரர்களாக, விஜேந்திரன் (அணித்தலைவர் - கலைமகள்), மகிந்தன் (யங்கம்பன்ஸ்), ரகுவரன் (யங்கம்பன்ஸ்), றஜீவன் (டயமன்ஸ்), உதயராஜ் (பொம்மேர்ஸ்), சிவரதன் (றேஞ்சர்ஸ்), குகேஞ்சன் (உடுப்பிட்டி யூத்), ஜெனிஸ்ரன் (நவஜீவன்ஸ்), தவராஜ் (கலைமதி), விஸ்ணுகாந்த் (கொலின்ஸ்), பானுராஜ் (கொலின்ஸ்), பிரசாந்த் (கொலின்ஸ்).

எவ். 7 அவஞ்சர்ஸ் - அணியின் உரிமையாளராக, வேலணை யாழ். பீச் ஹொட்டல் உரிமையாளர் உள்ளார். அணியின் முகாமையாளராக, எல்.விக்னேஸ்வரன், அணியின் பயிற்றுவிப்பாளராக எஸ்.சசிதரன் ஆகியோர் உள்ளனர். அணியின் வீரர்களாக, சந்துரு (அணித்தலைவர் - கலைமதி), பானுப்பிரியன் (கலைமதி), கோபிநாத் (பொம்மேர்ஸ்), கௌதமன் (நவஜீவன்ஸ்), பிரகாஸ் (யங்கம்பன்ஸ்), பிரதீப் (டயமன்ஸ்), வஜிதரன் (கருணாகரன்), அஜந்தன் (நியூட்டன்), திசாந்த் (கொலின்ஸ்), மயூரன் (கொலின்ஸ்), ஜீவச்சந்திரா (கொலின்ஸ்), ஜெயரூபன் (கொலின்ஸ்) ஆகியோர் உள்ளனர்.

நோர்த் 7 ஸ்ரார்ஸ் - அணியின் உரிமையாளராக ஐ.சுதாகரன், அணியின் முகாமையாளராக என்.சசிகரன், பயிற்றுவிப்பாளராக கே.அரவிந்தன் ஆகியோர் உள்ளனர். அணியின் வீரர்களாக, கோகுலதீபன் (அணித்தலைவர் - கொலின்ஸ்), குகரதன் (யங்கம்பன்ஸ்), சங்கர் (கொலின்ஸ்), தர்மீகன் (நியூட்டன்), தினேஸ்குமார் (கலைமதி), கேதீஸ் (மனோகரா), திலீபன் (கொலின்ஸ்), வஜிதரன் (கலைமதி), அபிசேகர் (சிவகுமாரன்), ரவி வர்மன் (றேஞ்சர்ஸ்), மயிர்தன் (கொலின்ஸ்), நிதர்சன் (அண்ணாசிலையடி) ஆகியோர் உள்ளனர்.
43 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
51 minute ago
2 hours ago