2025 ஜூலை 05, சனிக்கிழமை

வட மாகாண வல்லவன் தொடர்: சுப்பர் 8இல் குருநகர் பாடுமீன்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 01 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன், வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், தனது மைதானத்தில் நடாத்தி வரும் இவ்வருடத்துக்கான வட மாகாண வல்லவன் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு இரண்டாவது அணியாக குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது.

பாடுமீன் விளையாட்டுக் கழகத்துக்கும் வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான நான்காவது சுற்றுப் போட்டியொன்றில் வெற்றி பெற்றே, பாடுமீன் விளையாட்டுக் கழகம், சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

குறித்த போட்டியின் இரண்டு அணிகளதும் கோல் போடும் வாய்ப்புகள், எதிரெதிர் அணிகளது பின்கள வீரர்களின் சாதுர்யமான ஆட்டத்தால் தடுக்கப்பட, ஆட்டநேர முடிவில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெற்றிருக்கவில்லை. இதனையடுத்து, சுப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகும் அணியைத் தேர்வு செய்யும் பொருட்டு வழங்கப்பட்ட பெனால்டியில், 3-1 என்ற ரீதியில் வெற்றி பெற்ற பாடுமீன் விளையாட்டுக் கழகம், சுப்பர் 8 சுற்றில் தனது இடத்தைப் பதிவு செய்து கொண்டது.

இதேவேளை, மன்னார் சென். லூசியஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் முல்லைத்தீவு சென். லூட்ஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற சென். லூசியஸ் விளையாட்டுக் கழகம், நான்காவது சுற்றுக்குத் தகுதி பெற்றது. சென். லூசியஸ் அணி சார்பாக எடிசன், பிராங்ளின் ஆகியோர் கோல்களைப் பெற்றிருந்ததோடு, சென். லூட்ஸ் சார்பாக பெறப்பட்ட கோலை ஸ்ரீ பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .