2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

வருடாந்த இல்ல போட்டி

R.Tharaniya   / 2025 மார்ச் 17 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழூர் சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி வித்தியாலய அதிபர் ஏ.மனோகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது.

இதன்போது பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் பிரதம அதிதியாக் கலந்து கொண்டிருந்தார். இதன்போது பாடசாலை மாணவர்களிடையே மூன்று இல்லங்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் விவேகானந்தா இல்லம் 420 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், விபுலானந்தா இல்லம் 390 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், இராமகிருஸ்ணா இல்லம் 370 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிக் கேடயங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

.சக்தி  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .