Shanmugan Murugavel / 2022 ஜூன் 09 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

வல்வை விளையாட்டுக் கழகம், தனது வைர விழாவை முன்னிட்டும் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாகவும் நடாத்தும் 9 நபர் கொண்ட மாபெரும் வடமாகாண ரீதியிலான கால்பந்தாட்டத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது.
நேற்று மாலை நடைபெற்ற கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றமையைத் தொடர்ந்தே குழு பியிலிருந்து ஏழு புள்ளிகளுடன் பாடுமீன் விளையாட்டுக் கழகம் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
பாடுமீன் சார்பாக, லியோ, தினேஸ்குமார் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, றேஞ்சர்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஈழவேந்தன் பெற்றார்.
இப்போட்டியின் நாயகனாக பாடுமீனின் முன்களவீரர் கீதன் தெரிவானார்.
8 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Mar 2026