Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
குணசேகரன் சுரேன் / 2017 ஜூன் 12 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பளுதூக்கல் போட்டியில், ஆண்களுக்கான 85 கிலோகிராம் எடைப்பிரிவில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வீரன் யு. வினோத்குமார், 203 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றார்.
இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக அணிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி, தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் ஆண்கள், பெண்களுக்கான பளுதூக்கல் போட்டி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பளுதூக்கல் மண்டபத்தில், நேற்று (11)நடைபெற்றது.
85 கிலோகிராம் எடைப்பிரிவில், 10 வீரர்கள் பங்குபற்றினர். இதில், பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எல்.எம்.எல்.ஜி. வெல்லங்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யு.ஏ.டபிள்யு. பெரேரா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யு.வினோத்குமார் ஆகியோருக்கிடையில் கடுமையான போட்டி நிலவியது.
சொந்த இடத்து இரசிகர்களின் பலத்த வரவேற்புடன், வினோத்குமார், மற்றைய இரண்டு வீரர்களையும் பின்னுக்குத்தள்ளி, 203 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார். யு.ஏ.டபிள்யு பெரேரா, 202 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடமும், எல்.எம்.ஐ.ஜி.வெல்லங்க, 191 புள்ளிகள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago