Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
குணசேகரன் சுரேன் / 2018 ஜூன் 10 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில் யாழ். பல்கலைக்கழகம் வெற்றிபெற்றது.
50 ஓவர்களைக் கொண்ட இத்தொடரானது தற்போது நடைபெற்று வருகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான போட்டி கிழக்குப் பல்கலைக்கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். பல்கலைக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். பல்கலைக்கழகம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜனந்தன் ஆட்டமிழக்காமல் 35, கபில்ராஜ் 34, தனுஸ் 28, நிதர்சன் 26, சுபேந்திரன் 12, தனுஸ்க 12, தாரக 10 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், தேனுவர, ராஜபக்ஸ ஆகியோர் தலா 2, பத்திரன, பொல்வத்த, பண்டார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 213 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 27.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 50 ஓட்டங்களையே பெற்று 162 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அம்ஜத் 12, நுவான் 12 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், குருகுலசூரிய 3, துவாரகசீலன், சுபேந்திரன் ஆகியோர் தலா 2, ஜனந்தன், லோகதீஸ்வர், செந்தூரன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago