Shanmugan Murugavel / 2024 ஜூன் 19 , பி.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை முழுவதுமுள்ள முன்னணி தடகளவீரர்களின் பங்கேற்பை மஹியங்கனையில் கடந்த வாரயிறுதியில் மரதன், வேகநடை, சைக்கிளோட்டப் போட்டிகளுடன் ஆரம்பமான 48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி கண்ணுற்றிருந்தது.
இலங்கையின் மிகப் பெரிய மரதன்களில் 35 ஆண்டுகளுக்கு மேலாக அங்கம் வகிக்கும் நெஸ்லே நெஸ்டமோல்ட், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுடன் இணைந்து போட்டிகளை ஒழுங்கமைத்திருந்தது.
ஆண்களுக்கான வேகநடையில் பி.பி கயானி, ஒரு மணித்தியாலம் 49 நிமிடங்கள் 35 செக்கன்களில் போட்டித் தூரத்தை முடிவு செய்து முதலிடம் பெற்றிருந்தார். இரண்டாமிடத்தை ஒரு மணித்தியாலம் 54 நிமிடங்கள் 54 செக்கன்களில் பூர்த்தி செய்து யு.வி. கல்ஹாரி மதுரிகா பெற்றதோடு, மூன்றாமிடத்தை போட்டித் தூரத்தை ஒரு மணித்தியாலம் 59 நிமிடங்கள் 52 செக்கன்களில் பூர்த்தி செய்தி டி.எச். டினுஷ டில்ஹானி பெற்றிருந்தார்.

பெண்களுக்கான வேகநடையில் டி.எம்.ஐ.எஸ்.எஸ். டுனுகர ஒரு மணித்தியாலம் 37 நிமிடங்கள் 40 செக்கன்களில் போட்டித் தூரத்தை முடிவு செய்து முதலிடம் பெற்றிருந்தார். இரண்டாமிடத்தை ஒரு மணித்தியாலம் 38 நிமிடங்கள் 21 செக்கன்களில் பூர்த்தி செய்து வை.எஸ். விமலசூரிய பெற்றதோடு, மூன்றாமிடத்தை போட்டித் தூரத்தை ஒரு மணித்தியாலம் 39 நிமிடங்கள் 12 செக்கன்களில் பூர்த்தி செய்தி டி.எம்.டி. ருக்மல் பெற்றிருந்தார்.
முதலாமிடம் பெற்றவர்களுக்கு 50,000 ரூபாயும், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு 40,000 ரூபாயும், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு 30,000 ரூபாயும் வழங்கப்பட்டது. தவிர முதல் 10 இடங்களைப் பெற்றவர்களுக்கு சிறப்பு பணப்பரிசும் வழங்கப்பட்டது.
6 hours ago
8 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 Nov 2025