Mayu / 2024 பெப்ரவரி 13 , பி.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் பூரண அனுசரனையில் பரஹதெனிய நகரில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணிக்கு ஏழு பேர் கொண்ட உதைபந்தாட்ட தொடர் ஒன்று பரஹதெனிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
24 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சீ. அணி மற்றும் பம்மண்ண சார்ஜா எப்.சீ. அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இறுதிப் போட்டியில் வை.எஸ்.எஸ்.சீ அணி 06 : 01 என்ற கோல் அடிப்படையில் வெற்றி கொண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது.
இச் சுற்றுத் தொடரின் சிறந்த கோல் காப்பாளராக வை.எஸ்.எஸ்.சீ. அணியை சேர்ந்த முஸ்தாக்கும், சிறந்த தொடர் வீரராக அதே அணியை சேர்ந்த முன்சிபும் தெரிவு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற அணிக்கு 50,000 பணப் பரிசும் வெற்றிக் கிண்ணமும், இரண்டாம் இடத்தை பெற்ற அணிக்கு 25,000 பணப்பரிசும் வழங்கப்பட்டன.




9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025