Shanmugan Murugavel / 2021 மார்ச் 24 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்
பெண்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் புத்தளம் லயனஸ் கழகத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஸும்பா உடற்பயிற்சி திட்டத்துக்கு புத்தளத்து பெண்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சுமார் 100 பேர் வரை பயிற்சி பெறும் இந்த உடற்பயிற்சி வகுப்பில் சிறப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களை தெரிவு செய்து அவர்களுக்கான விருதுகள், லயனஸ் ஸும்பா விருதுகள் 2021 என்ற பெயரில் அண்மையில் புத்தளம் உள்ளக விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ் கலந்து கொண்டதோடு, கழகத் தலைவியான ஷதா பாயிஸ், பிரதித் தலைவர் ஜோதி, செயலாளர் மரியம் ராபி ஆகியோரோடு இணைந்து தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கான விருதுகளையும் வழங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
5 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
28 minute ago