Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 27 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்ட பாடசாலைகளுக்கிடையே, அகில இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனம் நடாத்திய 13 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்தாட்டத் தொடரில் சம்பியனான, திருகோணமலை கிண்ணியா தாருல் உலூம் மகா வித்தியாலயம், தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளது.
அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.எம்.நபீல் தலைமையில் இடம்பெற்ற குறித்த தொடரில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 16 பாடசாலை அணிகள் பங்கு கொண்டிருந்ததுடன், குறித்த தொடரானது, கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது.
இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு, திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரி அணியும் திருகோணமலை கிண்ணியா தாருல் உலூம் மகா வித்தியால அணியும் மோதிக் கொண்டன. இதில், திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரி அணியை, 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த திருகோணமலை கிண்ணியா தாருல் உலூம் மகா வித்தியாலய அணி, மாவட்ட சம்பியனாக தெரிவாகியது.
இப்போட்டியின் பிரதம அதிதிகளாக, கிண்ணியா வலயக் கல்வி அலுவலக உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஏ.கே.எம்.றிஸ்வி, கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் கே.ஜோகரத்னம், எம்.நிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இத்தொடருக்கான சகல அனுசரணைகளை, டிஜிட்டல் பிரிண்டர் உரிமையாளர் எம்.எம்.நிவாஸ் மேற்கொண்டிருந்தார்.
இத்தொடரின் தேசிய மட்டப் போட்டிகள், எதிர்வரும் டிசெம்பர் ஐந்தாம் ஆறாம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளன.
56 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago
5 hours ago