2025 ஜூலை 05, சனிக்கிழமை

'ஹொக்கி' இடைநிறுத்தம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரவிந்துவிராஜ் அபயசிறி

மத்திய மாகாண ஹொக்கி விளையாட்டுப் போட்டிகள் யாவும், கல்விப் பொதுத் தராதர (சா/த)  பரீட்சை காரணமாக, இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் செவ்வாய்க்கிழமை(8) தெரிவித்தனர்.

மத்திய மாகாண ஹொக்கி விளையாட்டுப்போட்டி, மாத்தளை சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள நந்தமித்திரா ஏக்கநாயக்க, சர்வதேச ஹொக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

க.பொ.த. சாஃத பரீட்சைகள் ஆரம்பமாகியதாலும் பண்டாரநாயக்க வித்தியாலயம் ஒரு பரீட்சை நிலையம் என்பதாலும்; இப்போட்டியானது மாணவர்களுக்கு இடையூறை விளைவிக்கும் என்பதை கருத்திற்கொண்டு  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரவித்தனர்.

போட்டியானது மாணவர்களுக்கு இடையூறாக அமைந்துவிடும் என கல்வித் திணைக்களத்திடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .