2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கொக்குவில் சி.சி.சி அணி 67 ஓட்டங்களால் வெற்றி

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

நியூ ஸ்டார்ஸ் பிறிமியர் லீக் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி 67 ஓட்டங்களால் வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட் அணியினை வென்றது.

யாழ். நியுஸ்ரார் விளையாட்டக்கழகம் யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் ஆதரவுடன் யாழ் மாவட்ட துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் லீக் முறையிலான இருபது - 20 துடுப்பாட்டப் போட்டியினை நடத்தி வருகின்றது.

இச்சுற்றுப்போட்டியின் போட்டியொன்று நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போது, கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியினை எதிர்த்து வட்டுக்கோட்டை ஓல்ட்கோல்ட் அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி 20 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 5 இலக்குகளை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக இ.இராகுலன் 50, ஏலாளசிங்கம் ஜெயரூபன் 34, ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஓல்ட் கோல்ட் அணி சார்பாக எஸ்.திலீபன் 2 இலக்குகளைக் கைப்பற்றினார். 174 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஓல்ட்கோல்ட் அணி, 20 பந்துபரிமாற்றங்களை எதிர்கொண்டு 9 இலக்குகளை இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதனால் கொக்குவில் சி.சி.சி அணி 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

ஓல்ட்கோல்ட் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஸ்ரீ.ஸ்ரீகுகன் 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் கொக்குவில் சி.சி.சி அணி சார்பாக கே.சாம்பவன் 4 (13), ஏ.ஜெயரூபன் 2 (37) இலக்குகளையும் கைப்பற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X