
அரச மற்றும் தனியார் துறைகளுக்காக இடம்பெற்ற சதுரங்க போட்டியில் 99X Technology அணி, எதிரணியினரின் கடும் சவாலை எதிர்கொண்டு, முதல் பத்து இடங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சதுரங்க போட்டி அண்மையில் விளையாட்டு விஞ்ஞானத்துக்கான தேசிய கல்வியனத்தில் இடம்பெற்றது (நவம்பர் 22 -25). இதில் 30க்கும் மேற்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 100க்கும் அதிகமான பங்குபற்றுநர்கள் பங்கேற்றிருந்தனர்.
விறுவிறுப்பாக தொடர்ந்து நான்கு நாட்கள் இடம்பெற்ற இந்த போட்டியில் 99X Technology அணி, சிறியளவு புள்ளிகள் வித்தியாசத்தில் தரப்படுத்தலில் ஏழாம் இடத்தை பெற்றுக் கொண்டது. முதலாமிடத்தை ஹற்றன் நஷனல் வங்கி அணியும், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை முறையே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மொபிடெல் ஆகிய அணிகள் தம்வசப்படுத்தியிருந்தன. இவ்வாறு முன்வரிசை இடங்களை பிடித்திருந்த அணிகள் பெரும்பாலும் சமமான புள்ளிகளை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனிநபர் போட்டிகளாக இடம்பெற்றிருந்த இந்த போட்டித் தொடர், பங்குபற்றுநர்களிடையே இடம்பெற்றிருந்ததுடன், சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தியிருந்த மூன்று பேரின் புள்ளிகள் இறுதியில் ஒன்று சேர்க்கப்பட்டு, அணிகளின் தரப்படுத்தல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
99X Technology அணியில் இணை தொழில்நுட்ப தலைவர் சமீர குணசிங்க, மென்பொருள் பொறியியலாளர்கள் புத்திக விஜேசிங்க மற்றும் ஜயங்க வகாரச்சி, சிரேஷ்ட கட்டமைப்பு பொறியியலாளர் ஹிரான் சில்வா மற்றும் செயற்பாடுகள் நிர்வாக அதிகாரி நவக நவரட்ன ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். சமீர குணசிஙக தனிநபர் சுற்றில் ஏழாமிடத்துக்கு தெரிவாகியிருந்தார். இவர் முதல் எட்டு அணிகளிலிருந்து தனிநபர் சுற்றில் தெரிவாகியிருந்த ஒரே வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமது ஊழியர்களின் திறமைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்காமல், அவர்களின் மேலதிக திறமைகளுக்கும் ஊக்குவிப்பையும் வாய்ப்பையும் வழங்கும் வகையில் வௌ;வேறு விதமான பொது போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி வழங்கிய வண்ணமுள்ளது. இதற்கமைவாக, கம்பனியின் சதுரங்க விளையாட்டில் ஆர்வமுள்ள அணியினர் இந்த அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சதுரங்க போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னர் தாபிக்கப்பட்ட 99X Technology, இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் BPO துறையில் முன்னணி நிறுவனமாக தன்னை படிப்படியாக நிலையுயர்த்திய வண்ணமுள்ளது. கொழும்பில் தலைமையகத்தை கொண்டுள்ளதுடன், ஒஸ்லோ, நோர்வேயில் கிளை அலுவலகத்தையும் கொண்டுள்ளது. உலகளாவிய ரீதியில் சுயாதீன மென்பொருள் வழங்குநர்களுக்கு உயர் தரம் வாய்ந்த மென்பொருள் தயாரிப்புகளை வழங்குவதில் கம்பனி ஈடுபட்டுள்ளது. இதுவரையில் 100க்கும் அதிகமான உயர்தரம் வாய்ந்த வர்த்தக நோக்கிலான மென்பொருள் தயாரிப்புகளை வடிவமைத்து வழங்கியுள்ளது.
கம்பனியின் மூலம் முன்னெடுக்கப்படும் சிறந்த அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் ஊழியர் நலன் குறித்த அக்கறையுடனான செயற்பாடுகள் போன்றவற்றுக்காக Great Place To Work® அமைப்பினூடாக அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வில் இலங்கையில் பணிபுரிவதற்கு சிறந்த 15 நிறுவனங்களில் ஒன்றாக இது தெரிவு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் சிங்கப்பூரில் இடம்பெற்ற நான்காவது ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகளில் திறமை முகாமைத்துவத்துக்கான விருதையும் வென்றிருந்தது.
