2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வேல்ஸ் கழகம் 4 இலக்குகளால் வெற்றி

Super User   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.சசிக்குமார்

திருகோணமலை வேல்ஸ் கழகம் நடத்தும் வைன் கிண்ணத்துக்கான முக்கோண  தொடர் கிரிக்கெட் போடடியில் ஞாயிற்றுக்கிழமை (24) யங்ஒலிம்பிக்ஸ் கழகத்தை 4 இலக்குகளால் வேல்ஸ் கழகம் வெற்றி கொண்டுள்ளது.

இத்தொடரில் வேல்ஸ் கழகம், யங்ஒலிம்பிக்ஸ், நோமன்ஸ் கழகம் என்பன பங்கு கொள்கின்றன. 2008ஆம் வருடம் இப்போட்டி தொடர்  வேல்ஸ் கழகத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வருடாந்தம் மாறி மாறி மற்றைய கழகங்கள் இதனை நடத்தி வருகின்றன.

திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற 50 பந்துப்பரிமாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் முதலில் களம் இறங்கிய யங் ஒலம்பிக்ஸ் கழகம் 42 பந்துப்பரிமாற்ங்களில் சகல இலக்குகளையும் இழந்து  154 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்த வீச்சில் செ.திவாகரன், பா.வச்தகுமார், எஸ்.சதீஸ்குமார் ஆகியோர் தலா  3 இலக்குகளை பெற்றுக் கொண்டனர். பா.வசந்தகுமார் ஒரு பந்து பரிமாற்றத்தில் 3 இலக்குகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு களம் புகுந்த வேல் கழகத்தினர் 35.4  பந்துப்பரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று 4 இலக்குகளால் வெற்றி பெற்றனர். செ.திவாகரன் 69, ச.சுதர்சன் 50, பு.தவேஸ்கர் 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். தேவரூபன், தினேஷ் தலா 2 இலக்குகளை பெற்றுக் கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .