2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

1330 கிலோமீற்றர் சைக்கிளோட்டத்தின் முதல் கட்டம் யாழில் நிறைவு

Kogilavani   / 2013 நவம்பர் 21 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுமித்தி தங்கராசா


கொழும்பு, மகரகமவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட 1330 கிலோமீற்றர் கொண்ட சைக்கிளோட்டம் புதன்கிழமை (20) யாழ்.துரையப்பா விளையாட்டரங்கினை வந்தடைந்தது. 

ஜனாதிபதியின் 68ஆவது பிறந்த தினத்தினையொட்டி மகரகமவில் இருந்து யாழ். வரையான சைக்கிளோட்டம் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் முப்படைகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

முதல் நாள் புத்தளத்தினை வந்தடைந்த மேற்படி சைக்கிளோட்டப் போட்டி தொடர்ந்து இரண்டாம் நாள் (19) புத்தளத்திலிருந்து வவுனியாவை வந்தடைந்தது.

மூன்றாம் நாளான நேற்று வவுனியாவிலிருந்து ஆரம்பித்த மேற்படி சைக்கிளோட்டம் நேற்று மதியம் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு 12 பேருடன் வந்தடைந்தது.

துரையப்பா விளையாட்டரங்கில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றதுடன், வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசில்களை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க இணைந்து வழங்கினார்கள்.

இதில் முதலிடம்பெற்ற வீரருக்கு சலவை இயந்திரமும், இரண்டாமிடம் பெற்றவருக்கு சைக்கிளும் வழங்கப்பட்டன.

இந்த சைக்கிளோட்ட போட்டியின் இரண்டாம் கட்டம் இன்று வியாழக்கிழமை (21) யாழிலிருந்து 150 பேருடன் ஆரம்பிக்கவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X