2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கால்பந்தாட்ட தொடரில் புத்தளம் சாஹிரா மூன்றாமிடம்

Super User   / 2013 செப்டெம்பர் 10 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம். எஸ். முஸப்பிர்


பாடசாலைகளுக்கு இடையிலான 15 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி அணி மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. 

கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான இந்த போட்டி தொடர் நேற்று திங்கட்கிழமை அநுராதபுரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில்  இடம்பெற்றது.

இந்த தொடரில் மூன்றாமிடத்தை தெரிவு செய்யும் போட்டியில் ஏறாவூர் அலிகார் முஸ்லிம் மகா வித்தியால அணியுடன் போட்டியிட்டதிலேயே  புத்தளம் சாஹிரா அணி வெற்றி பெற்று மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டது.

இவ்விரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் 2 – 2 என்ற கோல்கள் அடிப்படையில் சமநிலையில் முடிவடைந்ததையடுத்து பெனல்ட்டி முறையில் புத்தளம் சாஹிரா அணி 1-0 என்ற அடிப்படையில் மூன்றாம் இடத்தைப் பெற்றது.

போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட புத்தளம் சாஹிரா அணி  வெங்களப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டதுடன் வீரர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

புத்தளம் சாஹிரா அணிக்கு நீண்ட நாட்களின் பின்னர் தேசிய ரீதியில் வெற்றி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சுற்றுப்போட்டியில்இ மாணவன் எஸ்.ஏ.ஏ.நஃப்ரி சிஹாம் தலைமையில் ஆடிய ஸாஹிரா அணியின் கோல்கள் இரண்டையும் ஏ.எம்.எம்.முஸக்கிர்  போட்டார். இந்த அணிக்கு பொறுப்பாசிரியர்களாக எம்.எப்.எம். ஹுமாயூன் மற்றும் எஸ்.ஆர்.எம்.ஆசாத் ஆகியோர் கடமையாற்றினர்.

இதேவேளை, குறித்த வீரர்களுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு இன்று காலை  புத்தளம் நகரில் இடம்பெற்றது. புத்தளம் நகர சபைத் தலைவர் கே. ஏ. பாயிஸ் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வரவேற்பளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X