2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

யாழ். நியூஸ்ரார்ஸ் பிறிமியர் லீக் ஆரம்பம்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ். நியூஸ்ரார்ஸ் விளையாட்டுக்கழகம் யாழ். மாவட்ட துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் நியூஸ்ரார்ஸ் பிறிமியர் லீக் எனப்படும் இருபது – 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியினை வருடாவருடம் நடத்தி வருகின்றது. நியூஸ்ரார்ஸ் பிறிமியர் லீக் கடந்த 2012ஆம் ஆண்டு முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டாவது வருடமான இவ்வருடப்போட்டிகள், கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் கொக்குவில் இந்து மற்றும் மானிப்பாய் இந்து மைதானங்களில்; நடைபெற்று வருகின்றது. யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 20 துடுப்பாட்ட அணிகள் இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றுகின்றன.

கடந்த வருடம் நடைபெற்ற நியூஸ்ரார்ஸ் பிறிமியர் லீக் போட்டியின் இறுதிப்போட்டியில் மானிப்பாய் பரிஷ; கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணிகள் மோதியிருந்ததுடன், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி அவ்வருடம் சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X