2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தேசிய மட்ட வீர வீராங்கனைக்கு பயிற்சிகள்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 13 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றும் பாடசாலை மாணவர்களுக்கு 5 நாட்கள் கொண்ட வதிவிட பயிற்சிகள் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த 9ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் இன்று வெள்ளிக்கிழமை வரை  இவ்வதிவிடப் பயிற்சி இடம்பெறுகின்றது.  இதில் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்துள்ள தேசிய மட்ட பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகின்றார்கள்.

வட மாகாண கல்வி அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியபாலனின் தலைமையில் இடம் பெறுகின்ற இப்பயிற்சி முகமில் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வீர வீராங்கனைகள் சுமார் 150பேர் கலந்து கொண்டுள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X