2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வலைப்பந்தாட்ட நடுவர்களுக்கான பரீட்சை

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். வலைப்பந்தாட்ட நடுவர்களுக்கான பரீட்சை எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தினால் வலைப்பந்தாட்ட ஏ, பி, சி தராதர நடுவர்களைத் தெரிவுசெய்வதற்காக இப்பரீட்சை நடத்தப்படவுள்ளது.

இப்பரீட்சை எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், யாழ். மாவட்டப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டையை எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமைக்கு முன்னர் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ். மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கச் செயலாளர் சுரேந்தினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X