2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்திலுள்ள உதயதாரகை விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் இன்று புதன்கிழமை வழங்கப்பட்டன.

ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நிதியெதுக்கீட்டில் இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன், பிரதேச செயலாளர் எஸ்.வில்வரட்ணம் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X