2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

யாழிற்கு இரண்டாம் நாளிலும் இரண்டு பதக்கங்கள்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில்; யாழ்.மாவட்டத்திற்கு இரண்டாம் நாளான நேற்றும் இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.

கல்வி அமைச்சின் சுகாதார, உடற்கல்வி மற்றும் விளையாட்டுக் கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி கடந்த 2 ஆம் திகதி முதல் கொழும்பு சுகந்ததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

இரண்டாம் நாளான நேற்;று நடைபெற்ற போட்டிகளில் யாழ்.மாவட்டத்தில் கோலூன்றிப் பாய்தல், தட்டெறிதல் போட்டிகளில் இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.

17 வயதுப் பிரிவு பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியினைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அனிற்றா 3.00 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும், 21 வயதுப்பிரிவு பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் மானிப்பாய் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த எம்.சர்மிளா வெண்கலப் பதக்கத்தினையும்; பெற்றுக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X