2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வெற்றி தோல்வியின்றி நிறைவுபெற்றது 'பெட்டல் ஒப் பெற்றி'

Kogilavani   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பில் இடம்பெற்ற 'பெட்டல் ஒப் பெற்றி' விளையாட்டுப்போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு பெற்றது.

மட்டக்களப்பில் பிரசிசத்தி பெற்ற விளையாட்டு கழகங்களான மட்டக்களப்பு சிவானந்தா விiளாட்டுக்கழகத்திற்கும், மட்டக்களப்பு கோட்டமுனை விiளாயட்டுக்கழகத்திற்கும் இடையில் வருடாந்தம் நடைபெற்றுவரும் மட்டக்களப்பின் 'சமர்' என வர்ணிக்கப்படும் பெட்டல் ஒப் பெற்றி எனும் கிரிக்கெட் போட்டி நேற்றும் நேற்று  முன்தினமும் (5,6.10.2013) மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விiளாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற 50 ஓவர்களைக் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட இப் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு பெற்றது.

7ஆவது வருடமாக நடைபெற்ற இப்போட்டியில் இரண்டு கழகங்களும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றியீட்டியதால் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

இதன்முதல் போட்டியில் சிவானந்தா விளையாட்டுக்கழகம் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 50 ஓவர்கள் முடிவில் 295 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோட்டமுனை விளையாட்டுக்கழகம் 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதில் சிவானந்தா விளையாட்டுக்கழகம் 50 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதன் இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிவானந்தா விளையாட்டுக்கழகம் 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 176 ஓட்டங்களை பெற்றதுடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோட்டமுனை விளையாட்டுக்கழகம் 42 ஓவர்களில் 6 விககெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

போட்டியின் தொடர் சிறப்பாட்டக்காரராக சிவானந்தா விiளாட்டுக்கழகத்தை சேர்ந்த என்.தவகீசன், சிறந்த பந்து வீச்சாளராக கோட்டமுனை விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த எஸ்.பிரதீஸ், சிறந்த துடுப்பாட்ட வீரராக கோட்டமுனை விளiயாட்டுக்கழகத்தை சேர்ந்த எஸ்.வினோதன், சிறந்த களத்தடுப்பாளராக சிவானந்தா விiயாட்டுக்கழகத்தை சேர்ந்த எம்.கனிஸ்ட்டன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

சிவானந்தா விiளாட்டுக்கழகத்தின் தலைவர் கே.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சபையின் தலைவர் பொறியியலாளர் கே.ரஞ்;சன், சட்டத்தரணி வினோபா இந்திரன், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிரேம்குமார், மற்றும் கோட்டமுனை விளையாட்டுக்கழகத்தின் ஆலோசகர் எம்.ராஜா சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் ஆலோசகர் பாஸ்கரன், விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் உட்பட கழக வீரர்கள் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X