2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன செயலாளர் தலைமையிலான குழுவினர் திருமலை விஜயம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன செயலாளர் நிசாந்த ரணதங்க தலைமையிலான குழுவினர் திருகோணமலைக்கான விஜயம்  மேற்கொண்டார்கள்.

மேலும் பாடசாலைகளில் இவ்விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும என கலந்துரையாடியதுடன்இ  இதற்கிணங்க 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு லீக் முறையிலான சுற்றுப்போட்டி ஒன்றினை நடத்துவதற்கு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

கலந்துரையாடலுக்கு முன்னதாக  திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் 20 க்கு 20  சுற்றுப்போட்டியை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் பார்வையிட்டனர்.

இதன் பின்னர் முற்றவெளி மைதானத்தில் விளையாட்டு அமைச்சினால் அமைக்கப்படும்  கிரிக்கெட் மைதானத்தின் அமைப்பு வேலைகளையும் பார்வையிட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X