2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

பைனியர்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிண்ணியா பிரதேச சபையின் உதவித் தவிசாளர் கே.எம்.நிஹாரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட கால்ப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி புதன்கிழமை (16) காக்காமுனை தாருல் உலூம் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 50 விளையாட்டுக் கழகங்கள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றியிருந்தன.
இறுதிப்போட்டிக்கு ஜீனியர்ஸ் எதிர் பைனியர்ஸ் அணிகள் தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியில் பைனியர்ஸ் விளையாட்டுக் கழகம் ஒரு கோல் பெற்று சம்பியனாகியது.
முதலாவது பரிசாக 25,000 ரூபா பணப்பரிசும், வெற்றிக் கிண்ணமும், இரண்டாவது பரிசாக 15,000 ரூபா பணப்பரிசும், வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டன.

அத்துடன் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ்விளையாட்டு விழா நிகழ்ச்சிகளும் அன்றைய தினம் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு, பிரதம விருந்தினர்களாக திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்,  இந்நிகழ்வின் ஏற்பாட்டாளரும் கிண்ணியா பிரதேச சபையின் உதவித் தவிசாளருமாகிய கே.எம்.நிஹார் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X