2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

உதைபந்தாட்ட வீரர்களுக்காக சீருடை வழங்கி வைப்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 19 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழக உதைபந்தாட்ட வீரர்களுக்காக றெயின்போ எக்றோ சர்வதேச கம்பனியினால் சீருடை வழங்கி வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது நடைபெற்றது.

கடற்கரை வீதியில் அமைந்துள்ள மர்ஹூம் பௌஸி ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் பிரதித்தலைவரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.ஏ.பஷீர் தலைமையில் புனித ஹஜ்ஜூப்பெருநாள் தினமான  புதன்கிழமை (16) நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது கழகத்தின் சிரேஷ்ட வீரரும், தொழிலதிபருமான ஏ.எல்.அமீர்அலி (ஜெலீஸ்) கிரிக்கெட் வீரர்களுக்கான சீருடையினை வழங்கிவைத்தார்.

இதேவேளை, றெயின்போ எக்றோ சர்வதேச கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எம்.ஏ.அஸீஸ் உதைப்பந்தாட்ட வீரர்களுக்கான சீருடையினை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் கழகத்தின் ஆயுட்காலச் செயலாளர் எஸ். முஹம்மட்கான், மற்றும் சிரேஷ்ட வீரர்களான நிஜாமுடீன், அஸாத், ஜூனைடீன், பாயிஸ், இர்ஷாத், ராஜூடீன் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X