2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

இரு அணிகளுக்கும் சம்பியன் பகிர்ந்தளிப்பு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்
 
திருகோணமலை கால்பந்து லீக் முதல் தடவையாக பாடசாலைகளுக்கு இடையில் மாபெரும் ஆட்டம் ஒன்றினை நடத்தியது. நேற்று சனிக்கிழமை (26) ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்ட இப்போட்டியில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியை எதிர்கொண்டு கிண்ணியா மத்திய கல்லூரி மோதியது. இதில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போல்களைப்போட்டனர். போட்டி சமநிலையில் முடிவடைந்ததால், இரு அணிகளும் இணை வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்ட்டு கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 
கிழக்கு மாகாண கல்வி திணைக்கத்தின் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் திவாகரசர்மா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X