2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் முதல் தடவையாக கபடி சுற்றுப்போட்டி

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
முதல் தடவையாக மட்டக்களப்பில் இலங்கை கபடி சம்மேளனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மைக்கல்மென் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிசோர் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்துக்கான கபடி சுற்றுப் போட்டி நேற்று (26) சனிக்கிழமை மாலை ஆரம்பமானது.
 
இந்த கபடி சுற்றுப்போட்டியில் நாட்டிலுள்ள மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் உட்பட 12 மாவட்டங்களைச் சேர்ந்த 12 கபடி அணிகள் பங்கு கொண்டுள்ளன.
 
மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் உள்ளக மைதானத்தில் நடைபெறும் இந்த கபடி சுற்றுப்போட்டியின் ஆரம்ப வைபவம் நேற்று மாலை நடைபெற்றது.
 
இதில் இலங்கை கபடி சம்மேளனத்தின் செயலாளர் எச்.யு.ஏ.டி.ஹெட்டியாராய்ச்சி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்லரன், மட்டக்களப்பு வலயக் கல்வியலுவலகத்தின் உடற் கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.லவக்குமார், மைக்கல் மென் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் சட்டத்தரணி பி.எம்.சுலோஜன் உட்பட விளையாட்டுக்கழகங்களின் வீரர்கள் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.
 
இச் சுற்றப்போட்டியின் ஆரம்ப போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட கபடி அணியினை எதிர்த்து வவுனியா மாவட்ட அணி மோதியது.
 
இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடையவுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X