2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

சோபர் விளையாட்டுக்கழம் சம்பியன்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்தின் இருபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் சோபர் விளையாட்டுக்கழம் சம்பியனானது.

அணிக்கு ஆறுபேர் கொண்ட இச்சுற்றுபபோட்டியில் அம்பாறை மாவட்டத்திலிருந்து பிரபல்யமான 38 விளையாட்டுக்கழகங்கள் மோதிக்கொண்டன.

அட்டாளைச்சேனை அஸ்ரப் பொதுவிளையாட்டு மைதானத்தில்  கழகத்தின் உபதலைவர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் கழகத்தின் தலைவரும் தொழிலதிபருமான யூ.கே.ஆதம்லெப்பை, இளைஞர் நாடாளுமன்றத்தின் சபை முதல்வர் யூ.எல்.சபீர் மற்றும் தொழிலதிபர் என்.அப்துல் றசீட், அதிபர் ஏ.முஸம்மில் உள்ளிட்ட பலர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X