-குணசேகரன் சுரேன்
முரளி வெற்றிக்கிண்ண இருபது – 20 போட்டியில் அரையிறுதிப் போட்டிகள் இன்று திங்கட்கிழமை (04) கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெறுகின்றது.
அகில இலங்கை ரீதியில் நல்லிணக்கத்திற்கான முரளி வெற்றிக்கிண்ண இருபது - 20 போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக வடமாகாணத்தின் ஐந்து இடங்களில் நடைபெற்று வந்தன.
மேற்படி சுற்றுப்போட்;டியில் அகில இலங்கை ரீதியாக 12 அணிகள் பங்குபற்றியதுடன் அணிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதற் சுற்றுப்போட்டிகள் நடைபெற்றது.
ஒவ்வொரு பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றதுடன், மூன்று பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தில் இருந்த அணிகளில் நிகர ஓட்ட விகித அடிப்படையில் முன்னிலையிலிருந்த அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
இதனடிப்படையில் கொழும்பு சென்.பீற்றர்ஸ் கல்லூரி, தர்மசோகா கல்லூரி, கண்டி ரினிட்றி கல்லூரி, நல்லிணக்கத்திற்கான அமைப்பின் சீனிகம அணி ஆகியன அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
இன்று நடைபெறும் அரையிறுதியில் கொழும்பு சென்.பீற்றர்ஸ் அணியினை எதிர்த்து நல்லிணக்கத்திற்கான அமைப்பிய் சீனிகம அணியும், தர்மசோகா கல்லூரி அணியினை எதிர்த்து கண்டி ரினிட்றி அணியும் மோதுகின்றன.
யாழ். மாவட்ட தெரிவு அணி தெரிவுப் போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றிபெற்ற போதும், நிகர ஓட்ட விகிதம் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறமுடியவில்லை.