2025 ஜூலை 19, சனிக்கிழமை

வலைப்பயிற்சித் திடல் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 06 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சிவகருணாகரன்


கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கான வலைப்பயிற்சித் திடல் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதேவேளை, இதே மைதானத்தில் கடந்த 01ஆம் திகதி ஆரம்பமான முரளி நல்லிணக்க ருவென்ரி – 20 தொடரின் இறுதிப் போட்டியும்  நடைபெற்றது.

இதில் முதலாவதாக பெண்களுக்கான போட்டி இடம்பெற்றது. இதன்போது, வடமத்திய மாகாண சக்தி அணியும் சீனிகம அணியும் மோதின. சீனிகம அணி வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

ஆண்களுக்கான போட்டியில் கண்டி ரினிற்றி கல்லூரி அணியும் கொழும்பு சென் பீற்றர்ஸ் கல்லூரி அணியும் மோதின. போட்டி முடிவில் கண்டி ரினிற்றி கல்லூரி அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஹினிதும 24, சயிர் 20 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சில் நாணயக்கார 3 விக்கெட்டுக்களையும் தர்சன 2  விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

கொழும்பு சென். பீற்றர்ஸ் கல்லூரி அணி 19 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து, வெற்றி இலக்கை  அடைந்தது. இதில் உப்பிண்டர் 26, திஸ்ரஸ் ஆட்டமிழக்காது 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் சயிர் 2  விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் சென். பீற்றர்ஸ் கல்லூரி அணி முரளி நல்லிணக்க வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் சிறப்பு அதிதிகளாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்,  கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X