2025 ஜூலை 19, சனிக்கிழமை

எமது மாவட்டம் சர்வதேச ரீதியில் தடம் பதித்துள்ளது: ரிசாட்

Kogilavani   / 2013 நவம்பர் 06 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

'எமது மாவட்டம் சர்வதேச ரீதியில் இன்று விளையாட்டுத்துறையில் தடம் பதித்துள்ளது' என வர்த்தக முதலீட்டுத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

41 ஆவது ஆசிய கால்பந்தாட்ட போட்டிக்காக இலங்கையிலிருந்து 19 வயது பிரிவினருக்கான தேசிய கால்பந்தாட்ட அணியானது நாளை தாய்லாந்து செல்லவுள்ளது.

இவ் அணியில் மன்னார், புனித சவேரியர் ஆண்கள் கல்லூரி மாணவன் ஜே.யோண்சன் இடம்பெற்றுள்ளார். தனது இப்பயணம் குறித்து மேற்படி மாணவன் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'தாய்லாந்தில் நடைபெறும்  ஆசிய கால்பந்தாட்ட  போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு மன்னாரில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை மாணவர்கள் புரிய வேண்டும். மாணவர்கள் தமது கல்வி இலட்சியத்தினை மட்டும் நோக்காக கொண்டு செயற்படுவதன் மூலம் தத்தமது பெற்றோர்களுக்கும் மாவட்டத்துக்கும், தேசத்துக்கும் உதவி செய்ய முடியும்.

அதேவேளை எதிர்காலத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு மேலும் புத்தூக்கம் அளிக்கும் திட்டங்களை முன்னெடுக்க  உள்ளேன்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி அணியினர் 16 ஆம் திகதி நாடு  திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X