2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

யாழில் 'புட்சல்' கால்ப்பந்தாட்டம் நாளை ஆரம்பம்

Kogilavani   / 2013 நவம்பர் 14 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

குணசேகரன் சுரேன்

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியினால் வருடாவருடம் நடத்தப்படும் புட்சல் கால்ப்பந்தாட்டப் போட்டிகளின் 6 ஆவது வருடப் போட்டிகள் நாளை வெள்ளிக்கிழமை (15) காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக கல்லூரி அதிபர் நோயல் விமலேந்திரன் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பின்னெல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிகளின் இறுதிப்போட்டி பிற்பகலில் நடைபெறவுள்ளன.

இலங்கையில் பாடசாலைகள் ரீதியில் முதன்முதலாக புட்சல் போட்டிகளினை 2008 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டுப் பிரிவு ஆரம்பித்ததுடன், கல்லூரியின் முன்னாள் அதிபர் கே.ஏ.செல்லையா ஞாபகார்த்தமாகவே இச்சுற்றுப்போட்டி நடத்தப்படுகின்றது.

இவ்வருடம் 6ஆவது தடவையாக மேற்படி சுற்றுப்போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், இவ்வருடப் போட்டிகளில் யாழ்.மாவட்டம் சார்பாக 10 பாடசாலைகளின் கால்ப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றுகின்றன.

கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றுப்போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனாயிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

புட்சல் கால்ப்பந்தாட்டம் என்று பார்க்கும் போது அது சாதாரண கால்ப்பந்தாட்டப் போட்டிகளினை விட சற்று வித்தியாசமாகக் காணப்படுகின்றது.

கிரிக்கெட்டில் 50 ஓவர் போட்டிகளைவிட 20 ஓவர் போட்டிகள் எவ்வாறு விறுவிறுப்பினை அதிகரித்ததோ அது போலவே கால்ப்பந்தாட்டத்தில் புட்சல் போட்டிகள் விறுவிறுப்பினை மேலும் அதிகரித்துள்ளன.

சாதாரணமாக கால்ப்பந்தாட்ட போட்டிகள் 11 பேர் கொண்ட அணியாகக் காணப்படுகின்றதுடன், புட்சல் போட்டிகளில்
பங்குபற்றும் அணிகள் 5 பேர் கொண்டதாகக் காணப்படும்.

புட்சல் போட்டிகள் விளையாடும் மைதானம் சாதாரண கால்ப்பந்தாட்ட மைதானங்களைவிட சிறியதாகவிருக்கும். போட்டியின் இரண்டு பாதியாட்டங்களும் தலா 20 நிமிடங்களைப் கொண்டதாகவும் இடைவேளை 5 நிமிடங்களைப் கொண்டதாகவும் இருக்கும்.

  Comments - 0

  • JEYARAJ Thursday, 14 November 2013 04:42 PM

    தொடர்ந்து நடாத்த வாழ்த்துக்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X