2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தெற்காசிய விளையாட்டு போட்டி: பதக்கம் வென்ற யாழ்.மாணவன்

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

இளையோர் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் யாழ். மாணவன் டபிள்யு.சி.எல்.லிவிங்டன் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.

இளையோர் தெற்காசிய விளையாட்டுப்போட்டிகள் கடந்த வாரம் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், 21 வயதுப்பிரிவு ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி கடந்த 10 ஆம் திகதி நடைபெற்றது.

இப்போட்டியில் 61.07 மீற்றர் தூரம் எறிந்த லிவிங்டன் வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டார்.

யாழ்.மாவட்டம் சார்பாக முதன்முறையாக இளையோர் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு யாழ்.மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஆர்.மோனதாஸ் பயிற்சிகளை அளித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X