2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் கால்பந்தாட்ட லீக் செயலாளர் மலேசியா பயணம்

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் கால்பந்தாட்ட லீக் செயலாளர் ப.ஞானராஜ் கால்பந்தாட்ட முகாமைத்துவ நிர்வாக கற்கை நெறிக்காக இம்மாதம் 30ஆம் திகதி மலேசியா செல்கிறார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் தெரிவுசெய்யப்பட்ட இவர், மலேசியாவின் தலைநகர் கோலாலம்புரில் உள்ள ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறும் இப்பயிற்சி நெறியில் இவர் கலந்துகொள்ளவுள்ளார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கவுன்சில் உறுப்பினராகவும் மன்னார் கால்பந்தாட்ட லீக்கின் பொதுச் செயலாளராகவும் மன்னார் மாவட்ட இணைப்பாளராகவும் கால்பந்தாட்ட முதல் தர பயிற்றுவிப்பாளராகவும் இவர் கடமையாற்றிக்கொண்டிருக்கிறார்.

அத்துடன் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியராக இவர் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X