2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண அமைச்சுக்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 19 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

வடமாகாண அமைச்சுக்களின் அணிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் தற்போது யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றன.

கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், உதைபந்தாட்டம், பூப்பந்தாட்டம், கபடி, சதுரங்கள், கரம் போன்ற பல போட்டிகள் இவ்விளையாட்டுப் போட்டியில் இடம்பெறுகின்றன.

இவற்றில், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில்; நடைபெற்று வந்த ஆண்களுக்கான கரப்பந்தாட்டம் மற்றும் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டிகளின் தெரிவுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு கல்வி அமைச்சு அணியும் உள்ளூராட்சி அமைச்சு அணி தகுதி பெற்றுள்ளன.

அதேவேளை பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டிகளில் 3 அமைச்சுக்களின் அணிகள் மட்டும் பங்குபற்றியிருந்தன. அந்த அணிகளுக்கிடையில் நடைபெற்ற லீக் முறையிலான ஆட்டங்கள் அடிப்படையில் உட்கட்டமைப்பு அமைச்சு அணியும் பிரதம செயலக கொத்தணி அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.

ஆண்களுக்கான துடுப்பாட்ட போட்டிகளின் அரையிறுதிப் போட்டிகள் இன்று திங்கட்கிழமை (18) பிற்பகலில் கல்வியங்காடு ஜி.ரி.எஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

இதுவரை காலமும் ஆளுநர் வெற்றிக்கிண்ண போட்டிகள் என நடத்தப்பட்ட மேற்படி போட்டிகள், இவ்வருடம் வடமாகாண அமைச்சுக்களின் அணிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் என நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X