2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண நான்காவது வர்ண இரவு விருது வழங்கல்

Kogilavani   / 2013 நவம்பர் 29 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.குகன்


வடமாகாண நான்காவது வர்ண இரவுகள் நேற்று வியாழக்கிழமை (28) யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரியில் நடைபெற்றது.

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் தேசிய மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் பங்குபற்றி வடமாகாணத்திற்கு 40 பதக்கங்களை பெற்றுக்கொடுத்த பாடசாலை விளையாட்டு வீரர்கள், மற்றும் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வடமாகாணத்திற்கு 10 பதக்கங்களை பெற்றுக்கொடுத்த கழகங்களின் வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் 2010 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்த வர்ண இரவுகள் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X