2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச செயலக பெண்கள் அணிகளுக்கிடையிலான துடுப்பாட்டம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 29 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்காக யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களின் பெண்கள் துடுப்பாட்ட அணிகளுக்கிடையிலான மென்பந்தாட்ட துடுப்பாட்டப் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை முதல் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றன.

யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக அணிகள் மற்றும் யாழ்.மாவட்ட செயலக அணியுமாக மொத்தம் 16 துடுப்பாட்ட அணிகள் இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றுகின்றன. அணிக்கு 7பேர் பங்குபற்றும் 5 பந்துபரிமாற்றங்களைக் கொண்டதாக இச்சுற்றுப்போட்டி விலகல் முறையில் நடைபெற்று வருகின்றன.

யாழ்.மாவட்டத்தில் பெண்களுக்கான துடுப்பாட்டம் அண்மைக்காலமாக பாடசாலை ரீதியிலாக வளர்ச்சி கண்டு வருவதுடன், அவை தற்போது கழகங்கள், மற்றும் பிரதேச செயலகங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றிலும் சிறப்பாக விளையாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X