2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வேலணை - கோப்பாய் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

பிரதேச செயலகங்களுக்கிடையிலான இறுதிப்போட்டிக்கு கோப்பாய், வேலணை பிரதேச செயலக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

யாழ்.மாவட்ட பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான 5 பந்துபரிமாற்றங்கள் அணிக்கு 6 பேர் கொண்ட மென்பந்தாட்ட துடுப்பாட்டப் போட்டிகள் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன.

யாழ்.மாவட்ட 15 பிரதேச செயலக அணிகளும், யாழ்.மாவட்ட செயலக அணியொன்றுமாக மொத்தம் 16 அணிகள் இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றின.

விலகல் முறையில் நடைபெற்ற ஆட்டங்களின் அடிப்படையில் கரவெட்டி, கோப்பாய, வேலணை, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலக அணிகள் அரையிறுதிப்போட்டிக்குத் தெரிவாகின.

முதலாவது அரையிறுதிப்போட்டியில் கரவெட்டி அணியினை எதிர்த்து கோப்பாய் அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய கோப்பாய் அணி 39 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்ததாடிய கரவெட்டி அணி 31 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 8 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இரணடாவது அரையிறுதியாட்டத்தில் வேலணை - யாழ்ப்பாண அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணி 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலளித்தாடிய வேலணை அணி 41 என்ற வெற்றியிலக்கினை அடைந்தது.

வேலணை – கோப்பாய் அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி திகதியும் இடமும் பின்னர் அறிவிக்கப்படுமென யாழ்.மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஆர்.மோனதாஸ் தெரிவித்துள்ளார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X