2025 ஜூலை 21, திங்கட்கிழமை

யாழில் நெஸ்ரில் நிறுவன அனுசரணையில் கால்பந்தாட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


யாழ். மாவட்டத்தில் முதல் தடவையாக நெஸ்ரில் நிறுவனத்தின் அனுசரணையுடன் கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக நெஸ்ரில் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் செயற்பாட்டு முகாமையாளர் பந்துல எக்கொடகே தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கால்பந்தாட்ட லீக்குகளில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டிகள் சம்பந்தமான ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு யாழ். கிறீன்கிறாஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

'யாழ். மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மரதன் ஓட்டப்போட்டிகளை நடத்தியிருந்தோம். அதில் சுமார் 8000 பேர் கலந்துகொண்டனர்.

அந்த வகையில், இம்முறை கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் நாம் கால்பந்தாட்டப் போட்டியினை நடத்தவுள்ளோம்.

இப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் முதலாவது அணிக்கு 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் வெற்றிக்கிண்ணமும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 35 ஆயிரம் ரூபா பணமும் மூன்றாம் இடத்தைப் பெறும் அணிக்கு 25 ஆயிரம் ரூபா பணமும் பரிசுகளாக வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது, கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக்கிண்ணத்தை நெஸ்ரில் நிறுவனத்தின் முகாமையாளர் பந்துல எக்கொடகே யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் நெஸ்ரில் நிறுவனத்தின் அதிகாரிகளான சுகந்த சஜீவ், எஸ்.ரவீந்திரன் ஆகியோரும் யாழ். மாவட்ட விளையாட்டு அலுவலர் எம்.ஆர்.மோகனதாஸ், கால்பந்தாட்ட பயிற்றுநர் வி.முகுந்தன், யாழ்.மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் கால்பந்தாட்ட லீக்குகளின் தலைவர்கள், போட்டிகளில் கலந்துகொள்ளும் கழகங்களின் முகாமையாளர்கள், அணித்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X