2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மைலோ கிண்ண கால்ப்பந்தாட்டத்தின் யாழ்,வலிகாமம் போட்டிகள் ஆரம்பம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


யாழ்.மாவட்டத்தில் முதன்முறையாக நெஸ்ரில் நிறுவனத்தின் அனுசரணையிலான 'மைலோ கிண்ண' கால்ப்பந்தாட்டப் போட்டிகளின் யாழ்.வலிகாமம் அணிகளுக்கிடையிலான போட்டிகள் இன்று (09) யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

யாழ்.மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவின் அனுமதியுடன் நடைபெறும் இந்தச் சுற்றுப்போட்டியில் தொழில்நுட்ப இயக்குநராக யாழ்.மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஆர்.மோகனதாஸ் கடமையாற்றுகின்றார்.

யாழ்.மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை பிரதேச அணிகள் ஒரு பிரிவாகவும், யாழ்.வலிகாமம் அணிகள் இன்னொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் பருத்தித்துறை பிரதேச அணிகளுக்கிடையிலான போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (06) திகதி முதல் இமையாணன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று தற்போது கொலின்ஸ், வல்வை, விண்மீன், டைமன்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன.

இன்று (09) ஆரம்பமாகிய யாழ், வலிகாமம் அணிகளுக்கிடையிலான போட்டிகளிலிருந்தும் நான்கு அணிகள் தெரிவு செய்யப்படும்.

தொடர்ந்து இரண்டு பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 8 அணிகளுக்கிடையில் அடுத்தகட்டப் போட்டிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று, 14 ஆம் திகதி பிற்பகல் இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட விளையாட்டு அதிகாரி தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X