2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

உள்ளூராட்சி, ஆளுநர் செயலக கொத்தணி அணிகள் சம்பியன்

Kogilavani   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

வடமாகாண அமைச்சு அணிகளுக்கிடையிலான கரம் போட்டிகளில் உள்ளூராட்சி, ஆளுநர் செயலக கொத்தணி அணிகள் சம்பியனாகின.

வடமாகாண அமைச்சுக்களின் அணிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் தற்போது யாழ்.மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன.
உள்ளகப் போட்டிகள், மைதான போட்டிகள் ஆகியவற்றினை உள்ளடக்கிய மேற்படி சுற்றுப்போட்டியில் கரம் போட்;டிகள் நேற்று முன்தினம் (09) முதல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்று வந்தன.

ஆண்களுக்கான கரம் இறுதிப்போட்டியில் கல்வி அமைச்சு அணியும் உள்ளூராட்சி அணியும் மோதியன. இதில் உள்ளூராட்சி அணி 2:1 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்றது.

பெண்களுக்கான இறுதிப்போட்டியில் ஆளுநர் செயலக கொத்தணி அணியும் சுகாதார அணியும் மோதின. இதில் ஆளுநர் செயலக கொத்தணி அணி 2: 1 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X