2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மைலோ கிண்ணத்தின் காலிறுதிப் போட்டிகள்

Kogilavani   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

நெஸ்ரில் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்றுவரும் 'மைலோ கிண்ண' கால்ப்பந்தாட்டப் போட்டிகள் யாழ்.மாவட்டத்தில் முதன்முறையாக நேற்று (11) ஆரம்பமாகின.

நேற்றைய காலிறுதி ஆட்டங்களில்,

நாவாந்துறை சென்.மேரிஷ்  அணி மற்றும் வதிரி டைமன்ஸ் ஆகிய அணிகள் மோதி கொண்டன.

போட்டி நேரம் முடியும் வரையும் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்கள் பெற்றிருந்தன. இதனால் சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டு, சமநிலை தவிர்ப்பு உதையில், சென்.மேரிஷ் அணி 6:5 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இதேவேளை, குருநகர் பாடும்மீன் அணி 2:0 என்ற கோல் கணக்கில் விண்மீன் அணியினையும், பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணி 3:0 என்ற கோல் கணக்கில் வல்வை அணியினையும் வெற்றிகொண்டன.

தொடர்ந்து  ஒரு காலிறுதி ஆட்டமும், அரையிறுதி ஆட்டங்களும் இன்று இடம்பெறவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X