2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

யாழ். சென்.ஜோன்ஸ் - கண்டி ரினிற்றி அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலை

Super User   / 2013 டிசெம்பர் 20 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் கண்டி ரினிற்றி கல்லூரி அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இரு அணிகளுக்குமிடையிலான மட்டுப்படுத்தப்படாத பந்துப்பரிமாற்றங்கள் கொண்ட இரண்டு நாள் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 17ஆம் திகதி முதல் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்தது.

நாணயச் சுழற்சியில் வென்ற சென்.ஜோன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அவ்வணி முதல் இனிங்ஸில் 61 பந்து பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ராஜசிறிபிரியா பிரிசங்கர் 45, செபமாலைப்பிள்ளை ஜெனி பிளமின் 27, ஞானப்பொன்ராஜா ஆபிரஹாம் அனோஜன் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ரினிற்றி அணி சார்பாக, இந்திரேஸ் 4 (39) இலக்குகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸிற்காக களமிறங்கிய ரினிற்றி அணி முதல் நாள் ஆட்டநாள் முடிவில் 78 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை இழந்திருந்தது. தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்தபோது மேலும் 45 ஓட்டங்களைப் பெற்று மிகுதி 6 விக்கெட்டுக்களையும் இழந்தது.

இறுதியில் 67.5 பந்துபரிமாற்றங்களை எதிர்கொண்டு 123 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் டுலஜன் சிறிவர்த்தன, டுவிந்து திலகரத்னே, சசீர கமிந்த தலா 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணி சார்பாக அருளானந்தம் ஞானாமிர்தன் 4 (29), பரமானந்தம் துவாரகசீலன் 3 (09), சந்திரகுமரன் துவாரகன் 2 (37) விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

48 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 34.3 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 160 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை இழந்திருந்த போது ஆட்டத்தினை நிறுத்திக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் ராஜசிறிபிரியா பிரிசங்கர் 59, பரமானந்தம் துவாரகசீலன் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ரினிற்றி அணி சார்பாக டுவிந்து திலகரத்னே 3 (45) விக்கெட்டுக்களை கைப்பற்றினார். சென்.ஜோன்ஸ் கல்லூரி நிர்ணயித்த 209 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ரினிற்றி அணி இரண்டாவதும் இறுதியுமான நாள் ஆட்டம் நிறைவுக்கு வருகையில் 35 பந்துபரிமாற்றங்களை எதிர்கொண்டு 104 ஓட்டங்களைப் பெற்று 4 இலக்குகளை இழந்திருந்தது.

துடுப்பாட்டத்தில் சானுக 37, சசிர கமிந்த 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். யாழ்.மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்ட அணிகளுக்கும் பிற மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக தென்னிலங்கை அணிகளுக்கிடையில் நல்லுறவினை ஏற்படுத்தும் முகமாக துடுப்பாட்ட போட்டிகள் அண்மைக்காலமாக அதிகளவில் நடைபெற்று வருகின்றமை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X