2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தேசிய மேசைப்பந்தாட்டத்தில் சிறந்த வீராங்கனையாக சிந்துஜா தெரிவு

Super User   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யூ.நாதன்

தேசிய மட்ட மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் சிறந்த வீராங்கனையாக தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவி எஸ்.சிந்துஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

18, 21 வயதுப் பிரிவு மற்றும் திறந்த போட்டிகள் ஆகிய மூன்று பிரிவு மேசைப்பந்தாட்ட போட்டிகளிலும் சம்பியனாகிய இவர் தெரிவுசெய்யப்பட்டார்.

ஆசியா - ஜேர்மன் விளையாட்டுத்துறை பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் யாழ் மற்றும் வவுனியா மேசைப்பந்தாட்ட சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட அகில இலங்கை ரீதியிலான தனிநபர் மேசைப்பந்தாட்டப் சுற்றுப்போட்டி முதன்முறையாக சனிக்கிழமை யாழ். மத்திய கல்லூரி மேசைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.

ஆண், பெண் இருபாலாருக்குமாக 08, 10, 12, 15, 18, 21 ஆகிய வயதுப்பிரிவுகளில் நடத்தப்படும் இச்சுற்றுப்போட்டியில் பெண்களுக்கான போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X