2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சென்.மேரிஸ் அணி வெற்றி

Kogilavani   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஷ; அணி அம்பாறை அல்றைட்ஸ் அணியினை 5:1 என்ற கோல் கணக்கில் வென்றது.

அம்பாறை மாவட்டத்தில் சிறந்த அணிகளில் ஒன்றான அல்றைட்ஸ் அணிக்கும், யாழ்.மாவட்ட சம்பியன் அணியான நாவாந்துறை சென்.மேரிஸ் அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டி சனிக்கிழமை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களில் கோல் ஒன்றை அடித்த அல்றைட்ஸ் அணி போட்டியினை அசத்தலுடன் ஆரம்பித்தது. இருந்தும் அதற்கு பதில் கோலடிக்கும் விதத்தில் சென்.மேரிஸ் அணியினர் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டனர்.
முதல் பாதியாட்டத்தில் சென்மேரிஷ; அணி 2:1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியாட்டம் முழுமையாக சென்.மேரிஸ் அணியின் பக்கமிருக்க அவ்வணி அடுத்தடுத்து மூன்று கோல்களைப் போட்டது.

அல்றைட்ஸ் அணிக்கும் கோல் அடிக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அவ்வணி அச்சந்தர்ப்பங்களைத் தவறவிட்டது.

இறுதியில் சென்.மேரிஸ் அணி 5:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

யாழ்.மாவட்ட கால்ப்பந்தாட்ட அணிகள் வெளிமாவட்ட அணிகளுடன் கால்ப்பந்தாட்ட போட்டிகளில் விளையாடுவதும், யாழ்.மாவட்டத்தில் நடைபெறும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளில் வெளிமாவட்ட அணிகள் பங்குபற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X