2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'வடமாகாண பயிற்றுநர்கள் தேசிய பயிற்றுநர் பரீட்சைகளில் பங்குபற்றவேண்டும்'

Kogilavani   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன், சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாண மேசைப்பந்தாட்ட பயிற்றுநர்கள் தேசிய ரீதியிலான மேசைப்பந்தாட்ட பயிற்றுநர்கள் பரீட்சைக்கு ஆர்வத்துடன் தோற்றி தேசிய
பயிற்றுநர்களாக மாறவேண்டுமென இலங்கை மேசைப்பந்தாட்ட பயிற்சியாளர் அபிவிருத்தி குழுவின் மத்திய உபதலைவர் மன்சில் முதலீப் தெரிவித்தார்.

தேசிய ரீதியில் வெற்றிகளையீட்டிய யாழ்.மாவட்ட மேசைப்பந்தாட்ட வீர, வீராங்கனைகளுக்கான பரிசளிப்பு விழா நேற்று (29) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட மேசைப்பந்தாட்ட பயிற்றுநர் சிறப்பாக ஆங்கிலம் கதைக்கின்றனர். இது அவர்களில் பெரிய பலம். தென்பகுதியிலுள்ள பயிற்றுநர்களில் சிலர் கூட இவ்வளவுக்கு ஆங்கிலம் கதைக்கமாட்டார்கள்.

அத்துடன், வடமாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் வீரர்கள் மேசைப்பந்தாட்டத்தில் மிக ஆர்வமாகவுள்ளனர். அவர்களுக்கு மேசைப்பந்தாட்;டத் திடல்களின் தேவைகளும் அதற்கான உபகரணங்களின் தேவைகளும் அதிகமாகக் காணப்படுகின்றன.

வடமாகாண விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு பல தேவைகள் அவர்களுக்கு இருக்கின்றன. அந்தத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் சிறப்பான ஆளுகைகளினை வெளிப்படுத்துவார்கள்.

அத்துடன், மாவட்டங்களின் மேசைப்பந்தாட்டச் சம்மேளனங்கள் தங்கள் மாவட்டங்களிலுள்ள மேசைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்களின் ஆளுகைகளை வளர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும்.

அத்துடன், தேசிய மேசைப்பந்தாட்டச் சங்கங்களின் ஊடாக உதவிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் மேசைப் பந்தாட்டத்தினை வளர்த்தெடுக்க வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X