2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மீண்டும் குருநாகல் மாவட்ட சம்பியனாக பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் கழகம்

Super User   / 2014 ஜனவரி 13 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


மீண்டும் குருநாகல் மாவட்ட கால்பந்தாட்ட சம்பியனாக பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் கழகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் கிண்ண போட்டிகள் மாவட்ட ரீதியில் தற்போது இடம்பெறுகின்றன. இந்த வகையில் 16 கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்ற குருநாகல் மாவட்ட போட்டித்தொடர் கடந்த 2013 நவம்பர் மாதம் ஆரம்பமானது.

இதன் இறுதிப்போட்டி நேற்று குருநாகல் மாளிகாப்பிட்டிய மைதானத்தில் இடம்பெற்றது. இந்த போட்டியில் இலங்கை கால்ப்ந்தாட்ட சம்மேளத்தின் தலைவர் ரொட்ரிகோ மற்றும் குருநாகல் மாவட்ட கால்ப்பந்தாட்ட சம்மேளன தலைவரும் அமைச்சருமான ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் மற்றும் இராணுவ அணி ஆகியவற்றுக்கு இடையில் இடம்பெற்ற இப்போட்டியில் நடப்பு சம்பியனான இலவன் ஸ்டார்ஸ் அணியினர் ஆரம்பம் முதலே தமது ஆதிக்கத்தை செலுத்தினர். போட்டியின் முதல் 20 நிமிடங்களுக்குள் மொஹமட் பைசல் மற்றும் மொஹமட் சதாம் ஆகியோரின் திறமையினால் இரண்டு கோல்களைப் பெற்றுக்கொண்ட இலவன் ஸ்டார்ஸ் அணியினர் இடைவேளை வரை முன்னிலை வகித்தனர்.

போட்டியின் இரண்டாவது பகுதியில் கோல்களை பெறத்தக்க ஏராளமான சந்தரப்பங்களை இலவன் ஸ்டார்ஸ் கழகத்தினர் நலுவ விட்டதுடன் இராணுவ அணியினர் ஒரு கோளைப் பெற்றுக்கொண்டனர். போட்டி முடிவின்போது 2-1 எனும் அடிப்படையில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் குருநாகல் மாவட்ட சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

இதன்போது, பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் கழகத்தின் மொஹமட் பைசல் 19 வயதிற்குட்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டதுடன் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள வெளிநாட்டு போட்டி தொடரில் பங்குபற்றுவதற்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மொஹமட் சதாம் இலங்கை கால்பந்தாட்ட பயிற்சி அணியில் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X