2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உழவர் திருவிழா கால்பந்தாட்டப் போட்டி இறுதிப்போட்டி அணிகள் தெரிவு

Kogilavani   / 2014 ஜனவரி 14 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

அராலி தெற்கு மாவத்தை விளையாட்டுக்கழகம் வலிகாமம் கால்பந்தாட்ட லீக்கின் அனுசரணையுடன் உழவர் திருநாளையொட்டி நடத்தும் அணிக்கு ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை லீக்கிற்குட்பட்ட கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் தமது விளையாட்டுக்கழக மைதானத்தில் நடத்தி வந்தது.

இதில் ஞாயிற்றுக்கிழமை (12)  சுற்றுப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

முதலாவது அரையிறுதி ஆட்டத்தில், இளவாளை யங்ஹென்றீஸ் விளையாட்டுக்கழக அணி தன்னை எதிர்த்தாடிய அராலி கிழக்கு அண்ண விளையாட்டுக்கழக அணியினை 1:0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், மானிப்பாய் றெட்றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழக அணி தன்னை எதிர்த்தாடிய நவாலி சென்.பீற்றர்ஸ் விளையாட்டுக்கழக அணியினை 7:2 என்ற கோல் கணக்கில் வென்றது.

மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நாளை (14) பொங்கல் தினத்தன்று பிற்பகலில் நடைபெறவுள்ளதாக அராலி தெற்கு மாவத்தை விளையாட்டுக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X